search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோட்டா"

    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • 2 வாரங்களுக்கு முன்பு இதே போல் ஓட்டலில் சோதனை நடந்திருந்தது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த மேயர் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.ஓட்டல் களில் வெளியே புரோட்டா கற்கள் வைத்து புரோட்டா தயார் செய்யக் கூடாது, அவ்வாறு தயார் செய்யப்படும்போது புரோட்டா கற்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் ஓட்டலை விட்டு வெளியே போடப்பட்டி ருந்த புரோட்டா கற்களை உரிமையாளர்கள் மாற்றினார்கள்.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு சில ஓட்டல்களில் புரோட்டா கற்கள் ஓட்டலை விட்டு வெளியே போடப்பட்டிருப்பதாகவும், சுகாதார சீர்கேடாக உணவு தயார் செய்யப்படுவதாகவும் வந்த புகாரை தொடர்ந்து உணவகங்களில் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார். சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் இன்று காலை ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை உள்ள ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஓட்டல்களில் வெளியே புரோட்டா கற்கள் போடப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.அந்த கடைகளில் புரோட்டா கற்களை பறிமுதல் செய்தனர்.

    இன்று ஒரே நாளில் 9 ஓட்டல்களில் இருந்து புரோட்டா கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புரோட்டா கற்களை மாநகராட்சி டெம்போக்களில் ஊழியர்கள் ஏற்றி கொண்டு சென்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதே போல் ஓட்டலில் சோதனை நடந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×