search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை வளர்ச்சி"

    புதுவையின் வளர்ச்சியில் இதுவரை கவர்னர் கிரண்பேடியின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். #congress #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 4 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சி தவறி உள்ளது. விலைவாசி உயர்ந்து பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.

    அதோடு பொது மக்களுக்கு பாதுகாப்பின்மையும் உருவாகி உள்ளது. இதனை கண்டித்து புதுவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

    பெட்ரோல்- டீசல் விலையில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் விளைவாக உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை நாட்டில் உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் மத்திய பா.ஜனதா அரசு மக்களுக்கு பெரிய துரோகத்தை இழைத்துள்ளது.

    புதுவை மாகி பகுதியில் நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது இது கண்டிக்கத்தக்கது.

    பதவியில் இருக்கும் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டு காலம் முடிகிறது. 2 ஆண்டு காலம் பணி முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் என கிரண்பேடி ஏற்கனவே கூறியுள்ளார்.


    எனவே, அக்கூற்றை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். புதுவையின் வளர்ச்சியில் இதுவரை கிரண்பேடியின் பங்கு 1 சதவீதம் கூட இல்லை.

    புதுவை மாநிலம் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் சிறிய மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் புதுவை 5-வது இடம் பிடித்துள்ளது.

    சுகாதாரத்துறையில் அனைவருக்கும் மருத்துவம் என புதிய திட்டத்தை இந்தியாவில் முதன்முறையாக தொடங்கி உள்ளோம். புதுவை மாநில வளர்ச்சி 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய குழு அமைத்துள்ளோம். இந்த குழுவின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆட்சியின் ரூ.500 கோடி கடனை அடைத்துள்ளோம். இதுவரை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாகவே இருந்துள்ளார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின் போது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். #congress #Narayanasamy #Kiranbedi
    ×