search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை அரசு ஊழியர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுவை அரசின் நிதித்துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கும் பொருந்துமா என அறிவிக்கப்படவில்லை.

    இது தொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதனால் அர சுக்கு ஆண்டிற்கு ரூ.54 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×