search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புடவைகள்"

    • பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் பிறந்தநாள் விழா.
    • குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் அந்த வார்டு ஏழை பெண்களுக்கு புடவைகளை பரிசாக வழங்கி உதவினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி எப்சிராஜ், வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
    • கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    தஞ்சாவூர்:

    கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 15.9.2022 முதல் "தீபாவளி"2022-யை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை" நடைபெற்று வருகிறது.

    இச்சிறப்பு தள்ளுபடி விற்பனை 30.11.2022 வரை உள்ளது . அதன்படி தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்களை உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

    இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

    மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையா ளர்களிடமிருந்து பெறப்பட்டு, 11-வது மற்றும் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் போனஸாக வழங்கி மொத்த முதிர்வு தொகைக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்துள்ளார்.

    • அம்மனுக்கு 108 புடவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவிலில் வைத்துள்ள நவராத்திரி கொலுவை பக்தர்கள் கண்டு களித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் பால விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெறும்.

    ஊஞ்சல் சேவையின் போது பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், கீேபார்டு வாசித்தல், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு 108 புடவைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு உறுப்பினர் வண்டார் குழலி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    கோவிலில் வைத்துள்ள நவராத்திரி கொலுவையும் பக்தர்கள் கண்டு களித்தனர். 

    ×