என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலவிநாயகர் கோவிலில் நவராத்திரி விழா- மேயர் பங்கேற்பு
    X

    விஷ்ணு துர்க்கைக்கு 108 புடவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பாலவிநாயகர் கோவிலில் நவராத்திரி விழா- மேயர் பங்கேற்பு

    • அம்மனுக்கு 108 புடவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவிலில் வைத்துள்ள நவராத்திரி கொலுவை பக்தர்கள் கண்டு களித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் பால விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெறும்.

    ஊஞ்சல் சேவையின் போது பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், கீேபார்டு வாசித்தல், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு 108 புடவைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு உறுப்பினர் வண்டார் குழலி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    கோவிலில் வைத்துள்ள நவராத்திரி கொலுவையும் பக்தர்கள் கண்டு களித்தனர்.

    Next Story
    ×