search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புக்கர் பரிசு"

    • புக்கர் பரிசு போட்டிக்கு பெருமாள் முருகனின் நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ என்ற இந்திய எழுத்தாளர் புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை கொண்ட விருது. எழுத்தாளருக்கும், மொழி பெயர்த்தவருக்கும் இத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவல், 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அனிருத்தன் வாசுதேவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

    வெவ்வேறு சாதியை சேர்ந்த காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிச்செல்வது பற்றியும், ஆணவ கொலை பற்றியும் இதன் கதை அமைந்துள்ளது. வேறு 12 எழுத்தாளர்களின் நாவல்களுடன் 'பைர்' நாவல் போட்டியிடுகிறது. தனது நாவல் தேர்வு செய்யப்பட்டதற்கு பெருமாள் முருகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது, தனது மிக முக்கியமான புத்தகம் என்றும் அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ என்ற இந்திய எழுத்தாளர் புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

    • 2022ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    லண்டன்:

    இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இந்த நாவல் அமைந்துள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.

    புக்கர் பரிசை பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்.
    • அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

    புக்கர் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் (70) காலமானார். இதுகுறித்து அவரது வெளியீட்டாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து 4வது எஸ்டேட் புக்ஸ் கூறுகையில், " எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், குறிப்பாக அவரது கணவர் ஜெரால்ட்ருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இது ஒரு பேரழிவு தரும் இழப்பு. அத்தகைய அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் முடியும்" என்று குறிப்பிட்டார்.

    இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் பரிசுத்தொகை (இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம் ரூபாய்) அடங்கிய சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான, சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, தனது ‘ரெட் சமாதி’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கீதாஞ்சலி ஸ்ரீயின் ரெட் சமாதி நாவல் ஆங்கிலத்தில் 'டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. பிரபல மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் என்பவர் ரெட் சமாதியை மொழிபெயர்த்தார். 

    புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும். இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் பரிசுத்தொகை (இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம் ரூபாய்) அடங்கிய சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.

    இதுகுறித்து கீதாஞ்சலி ஸ்ரீ கூறியதாவது:-

    புக்கர் பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை, நான் இதனை வெல்வேன் என்றும் நினைக்கவில்லை. புக்கர் விருதுக்கு தான் தேர்வாவேன் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. நான் தனிமை மற்றும் அமைதியில் வாழும் எழுத்தாளர். எனக்கு புக்கர் கிடைத்திருப்பது பெரிய அங்கீகாரம். இந்த சமயத்தில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், பணிவாகவும் உணர்கிறேன். எனக்கும் இந்தப் புத்தகத்துக்கும் பின்னால், இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளின் வளமான மற்றும் செழிப்பான இலக்கிய பாரம்பரியம் உள்ளது. இந்த மொழிகளில் உள்ள சில சிறந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்வதன் மூலம் உலக இலக்கியம் வளமடையும்.

    இவ்வாறு கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

    ரெட் சமாதி என்ற இந்த நாவல் இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை ஆகும். இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.

    ×