search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிர்லா கோளரங்கம்"

    • இந்தியாவின் பிற பகுதிகளில் சந்திர கிரகணம் தென்பட்டது.
    • அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த சந்திர கிரகணம் நிகழும்.

    இந்தியாவில் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது. 


    சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட மாவட்டங்களில் உள்ள அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழகத்தில் சந்திர கிரகணம் தென்படவில்லை. சந்திர கிரகண நிறைவு நேரத்தில் வானத்தில் முழு நிலவு தென் பட்டதுடன் மேகம் அதை மறைப்பதை காண முடிந்தது.


    இது தொடர்பாக சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் செளந்திரராஜா பெருமாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இன்று நடைபெற்றது முழு சந்திரகிரகணம். இது ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் காணப்பட்டது. மழை காரணமாக முன்பே கணித்தபடி சென்னையில் தென்படவில்லை. எனினும், உலகின் பல பகுதியிலும், இந்தியாவின் பிற பகுதியிலும் கிரகணம் தென்பட்டது என்பதை காண்பித்தோம். அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ந் தேதி நிகழும். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×