search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birla Planetarium"

    • இந்தியாவின் பிற பகுதிகளில் சந்திர கிரகணம் தென்பட்டது.
    • அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த சந்திர கிரகணம் நிகழும்.

    இந்தியாவில் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது. இந்த கிரகணம் 6 மணி 19 நிமிடங்களுக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலையை காண முடிந்தது. 


    சென்னையில் மாலை 5.39 மணி சந்திர கிரகணம் தெரியும் என கணிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட மாவட்டங்களில் உள்ள அறிவியல் கோளரங்கங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழகத்தில் சந்திர கிரகணம் தென்படவில்லை. சந்திர கிரகண நிறைவு நேரத்தில் வானத்தில் முழு நிலவு தென் பட்டதுடன் மேகம் அதை மறைப்பதை காண முடிந்தது.


    இது தொடர்பாக சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் செளந்திரராஜா பெருமாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இன்று நடைபெற்றது முழு சந்திரகிரகணம். இது ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் காணப்பட்டது. மழை காரணமாக முன்பே கணித்தபடி சென்னையில் தென்படவில்லை. எனினும், உலகின் பல பகுதியிலும், இந்தியாவின் பிற பகுதியிலும் கிரகணம் தென்பட்டது என்பதை காண்பித்தோம். அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ந் தேதி நிகழும். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சென்னையில் இன்று பள்ளி மாணவ, மாணவியர் நிழல் இல்லா நாள் வானியல் நிகழ்வை ஆர்வமுடன் கண்டு களித்தனர். #ZeroShadowDay
    சென்னை:

    சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். அந்த நாளையே நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ய நிழல் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை.

    இந்நிலையில், புதுச்சேரியில் நிழல் இல்லா நாள் அபூர்வ நிகழ்வு ஏப்ரல் 21-ந் தேதியும், ஆகஸ்டு 21-ந் தேதியும் நிகழும் என அறிவியல் இயக்கம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 21ம் புதுச்சேரி மக்கள் இந்த நிகழ்வை கண்டு ரசித்தனர்.



    சென்னை நகரில் இன்று இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் காண்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 12.07க்கு சூரியன் செங்குத்தாக தலைக்கு மேலே வந்தபோது, இந்த நிகழ்வை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். சென்னை தவிர பெங்களூர் மற்றும் மங்களூரிலும் இந்த பூஜ்ய நிழலை கண்டுரசித்தனர். இதேபோல் ஆகஸ்ட் 18-ம் தேதியும் இந்த பூஜ்ய நிழலை பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். #ZeroShadowDay
    ×