search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின வாலிபர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் முழுவதும் எரிந்து காணப்படுகிறது. அவர் உயிருடன் எரிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
    • வீடியோ 7 வினாடிகள் ஓடுகிறது. அதில் குக்கி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

    மணிப்பூரில் பழங்குடியின வாலிபர் ஒருவரின் உடலை குழியில் வைத்து எரிக்கும் வீடியோ காட்சிகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு வாலிபர் கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் டிரவுசர் அணிந்துள்ளார். அவர் குழியில் படுத்த நிலையில் உள்ளார். அவரது முகத்தில் காயம் உள்ளது. உடல் முழுவதும் எரிந்து காணப்படுகிறது. அவர் உயிருடன் எரிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

    இந்த வீடியோ 7 வினாடிகள் ஓடுகிறது. அதில் குக்கி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ மணிப்பூர் பகுதியில் பல வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாவதால் மணிப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ மே மாதம் முதலே பரவி வருவதாக தெரிகிறது. அவர் யார் என்று அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • பிரவேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டார்.
    • அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பண்டிட்

    போபால் :

    மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தை சேர்ந்த தஸ்மத் ராவத் என்ற பழங்குடியின வாலிபர் மீது மற்றொரு பிரிவை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதைத்தொடர்ந்து பிரவேஷ் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபர் தஸ்மத் ராவத்தை முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது வீட்டுக்கு வரவழைத்து, கால்களை கழுவி மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லாவை விடுதலை செய்யுமாறு தஸ்மத் ராவத் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஒரு தவறு நடந்து விட்டது. பிரவேஷ் சுக்லா தனது தவறை உணர்ந்து விட்டார். எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசுக்கு எனது கோரிக்கை ஆகும்' என தெரிவித்தார்.

    பிரவேஷ் சுக்லா, மிகவும் கீழ்த்தரமான செயலை செய்திருக்கிறாரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'ஆம். நான் ஒத்துக்கொள்கிறேன். அவர் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பண்டிட். அவரை விடுவிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
    • சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அங்கு ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு பழங்குடியின வாலிபரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது.

    சித்தி மாவட்டத்தின் பஹ்ரி அருகே உள்ள குப்ரி என்ற கிராமத்தை சேர்ந்த பிரவேஷ்சுக்லா என்பவர் தான் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தது என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரான தஸ்மத் ராவத்தும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இதற்கிடையே பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ராகுல்காந்தியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, 'குற்றவாளிக்கு மதம், சாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக அவர் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார் என்றார்.

    அதை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.

    இன்று காலை பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை நாற்காலியில் உட்கார வைத்து முதல்-மந்திரி சவுகான் கீழே அமர்ந்து காலை கழுவினார். அதோடு நடந்த சம்பவத்துக்காகவும் பழங்குடியின வாலிபரிடம் முதல்-மந்திரி மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

    • இதுதான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேள்வி.
    • வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.

    மேலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்துள்ள அவர், "இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதை காட்டு தர்பார் என்று அழைக்கவேண்டும். ஏன் பாஜக தலைவரை கைது செய்யவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதேபோல் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏக்களுடன் இருந்த புகைப்படங்களை மற்றொரு டுவிட்டர் பதிவில் ஷேர் செய்திருந்தார்.

    டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யனும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை டேக் செய்து இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

    வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    வீடியோ வைரலாக பரவிய நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதலமைச்சர் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    ×