search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பம்பு செட்டு"

    • சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

    கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நில மேம்பாட்டு திட்டங்கள், சிறுபாசன திட்டங்கள், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், வேளாண் கருவிகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல், சூரிய மின் சக்தி பம்ப் செட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேளாண் பொறியியல் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு, பாசன வசதிக்காக மின் கட்டமைப்புடன் சாராதா தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டில் 84 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு ரூ.94.47 லட்சம் மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.70.85 லட்சம் ஆகும். இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியத்ெதாகை ரூ.8.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 221 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை எந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பயன் அடைந்த விவசாயி பேச்சி யம்மாள் கூறியதாவது:-

    நான் ஊட்டி இத்தலார் கிராமத்தில் வசித்து வருகிறது. எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 5 எச்.பி. திறன் கொண்ட சூரியசக்தி பம்பு செட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சே்ந்த எனக்கு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டு அமைத்து கொடுத்தார்கள். இதன் விலை ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 548. எங்களது பங்களிப்பாக ரூ.33 ஆயிரத்து 254 மட்டுமே செலுத்தினோம். எங்களது நிலத்தில் தெளிப்பு நீர் பாசன அமைப்பு அமைக்கப்பெற்று சூரிய சக்தி பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதனால் எங்களுக்கு குறைந்த நீரில் பாசனம் செய்ய முடிந்தது. மேலும் டீசல் வாங்குவதற்கான பணமும், நேரமும் மிச்சமாகிறது. இதன் மூலம் லாபம் ஈட்ட முடிகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊடி இத்தலார் பகு தியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி கூறியதாவது:-

    சூரிய சக்தி பம்பு செட்டுடன் தெளிப்பு நீர் பாசன அமைப்பினை இணைத்துள்ளதால் குறை வான தண்ணீரில் முழுமை யாக பாசனம் செய்ய முடிகிறது. உற்பத்தி செலவு குறைந்து லாபம் ஈட்ட முடிகிறது. எங்களை போன்ற விவசாயிகளின் நலனினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
    தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. மானியத்தில் அமைக்கும் இந்த புதிய திட்டத்தை கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்ற னர். 

    விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டு களை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடு களுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்ப டுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்ப டுகின்றன. 

    தொழில் முனைவோர், விவசாயகுழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். 

    2022-23-ம் ஆண்டு வேளாண் கூட்டத் தொடர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்ட உள்ளன. இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். 

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையிலுள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை (பொறுப்பு) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

    மாவட்ட கலெக்டர் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான எந்திரங்கள் ஒப்பந்தப்பு ள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியா ளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
     
    ×