search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி பெண் தற்கொலை"

    புதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    புதுக்கடையை அடுத்த ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டென்சன். இவரது மகள் டெர்பின் (வயது 23). பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

    இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று டென்சன் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் டெர்பின் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    டென்சன் வீடு திரும்பினார். அப்போது டெர்பின் அறை கதவு சாத்தப்பட்டு இருந்தது. நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.

    இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் மின் விசிறியில் டெர்பின் தூக்கில் தொங்கினார். பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வியாசர்பாடியில் திருமணம் ஆன 4 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி காசிநகரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் கார்த்திக் (வயது 30). சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.

    4 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும், ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த கோட்டைசாமி மகள் கவாஸ்கி (26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. கவாஸ்கி எம்.ஏ. பட்டதாரி. ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கார்த்திக்-கவாஸ்கி தம்பதியினர் காசிநகர் 15-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 4 மாத விடுமுறையில் இருந்த கவாஸ்கி நாளை ரே‌ஷன் கடை கண்காணிப்பாளர் பணியில் மீண்டும் சேருவதற்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் கவாஸ்கி நேற்று வியாசர்பாடி காசிநகர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்தி எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மகள் கவாஸ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவரது தந்தை கோட்டைசாமி மற்றும் உறவினர்கள் சென்னை வந்தனர். அவர், தனது மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். சாவில் மர்மம் இருக்கிறது என்று போலீசில் புகார் செய்தார்.

    திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
    ×