search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிற்கும்"

    • நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.
    • வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு ஏற்படுவதாக மாநகராட்சி மேயருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.

    நீர்க்கசிவுக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை தொடர்ந்து கழிவறையையும் ஆய்வு செய்தார். கழிப்பறையின் தரை தளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தவும், மேலும் கழிவு தேங்காமல் இருக்க உறிஞ்சி குழாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஏ.டி.எம்.மிஷின் களை நிறுவுவதற்கும், நடைபாதையில் இடை யூறாக இருக்கின்ற கடைகளை மாற்றுவதற்கும் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரமாக பஸ் நிலையம் முழுவதும் ஆய்வு மேற்கண்ட மேயர் மகேஷ் பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் மேயர்மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதை சரி செய்ய என்னென்ன நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. அப்போது மேல் கூரை மேல் தகர கூரைகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே நீர்கசிவு ஏற்படும் பகுதிகளில் தகர கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்தமோகன் நகர்நல அதிகாரி ராம் மோகன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலை மை செயற்குழு உறுப்பி னர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மலைப்பாதை வழியாக மேலே சென்று அந்த இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கின்றார்கள்.
    • மர்மநபர்கள் திருடி வந்து எரிபொருள் இல்லாமல் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்களா?

    அந்தியூர், 

    அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் அமை ந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.

    இந்த அணையை சுற்றி பார்ப்பதற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். தற்போது இந்த அணையின் முன் பகுதி நுழைவாயிலில் பெரிய கதவு போட்டு பூட்டப் பட்டுள்ளது. இதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக மேலே சென்று அந்த இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கின்றார்கள்.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே கடந்த 2 நாட்களாக மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலேயே இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.

    இந்த மோட்டார் சைக்கிள் யாருடையது, மர்மநபர்கள் திருடி வந்து எரிபொருள் இல்லாமல் அங்கேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்களா? இல்லை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அங்கு நிறுத்திவிட்டு வனப்பகுதிகளுக்குள் சென்று மீண்டும் திரும்பி வரவில்லையா? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    இதனால் அந்தியூர் பகுதியில் இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக பர்கூர் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி யாருடையது, எதற்காக இங்கே நிற்த்தப்பட்டுள்ளது என்று குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×