search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை எடுக்க வேண்டும்"

    • ராட்டை சுற்றிபாளையம் காலனி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
    • தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை டவுன் பஞ்சாயத்து 13-வது வார்டுக்கு உட்பட்ட ராட்டை சுற்றிபாளையம் காலனி பகுதி மக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு வழங்கினர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    அவல்பூந்துறை டவுன் பஞ்சாயத்து 13-வது வார்டு பகுதி காலனியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கிறோம். இங்கு குடிநீர் வசதி இல்லாததால் 2 கி.மீ. சென்று எடுத்து வருகிறோம்.

    பல வீடுகளில் வயதானவர்களாக உள்ளதால் தண்ணீர் எடுத்து வர சிரமமாக உள்ளது. நல்ல தண்ணீர் பைப்லைன் வழங்க வேண்டும்.

    எங்கள் பகுதி வழியாக பிரதான குடிநீர் குழாய் செல்வதால் பொது குழாய் அமைத்து அல்லது தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.

    எங்கள் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் அரசு சலுகை பெற முடியவில்லை. பட்டா கோரி விண்ணப்பித்தால் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டா வகையில் உள்ளதாக கூறுகின்றனர்.

    எங்கள் பகுதிக்கு சாலை, கழிவு நீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும். மழை காலங்களில் சிரமப்படுகிறோம்.

    எங்கள் பகுதிக்கு தனியாக சமுதாய கூடம் அமைத்து கொடுத்தால், எங்களது குடும்ப நிகழ்வுகள், மக்களுக்கான பணிகளை வைத்து செயல்படுத்த வாய்ப்பாகும். எங்கள் சமுதாயத்துக்கு தனியாக மயானம் ஒதுக்கி, சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • தற்போது வீட்டின் அருகே பட்டா வாங்கியதாக கூறி 20 அடி ஆட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்து 3 சென்ட் நிலத்தை சுற்றி வேலிகல் நட்டு சென்று உள்ளனர்.
    • அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுாி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட புலிகரை அடுத்த இருள ப்பட்டி காட்டுக் கொட்டாய் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப் பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

    இருளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் சுமார் அரசுக்கு சொந்தமான 30 ஏக்கா் பரப்பளவில் புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் போயா் சமூகத்தை சோ்ந்த 5 குடும்பத்தினா் சுமாா் 70 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த புறம்போக்கு நிலத்தில் நான்கு பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனா்.

    அதே பகுதி சேர்ந்த வேற்று சமூகத்தை சோ்ந்த ஒருவர் 4 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்து வீடு கட்டி வாழ்ந்து வருகிறாா். இந்நிலையில் வசதி படைத்த நபருக்கு, மீண்டும் 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் வீட்டின் அருகே கடந்த 2020ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாவை கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி மூலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபரின் மகன் ஐடி கம்பெனியில் பணிபுாிந்து வரும் நிலையில் இலவச வீட்டு மனை பட்டா பெரும் அரசு விதிமுறையை மீறி போலியாக வீட்டுமனை பட்டா பெற்றுள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டு களாக தான் பெற்ற வீட்டுமனை அருகே வராமல் தற்போது வீட்டின் அருகே பட்டா வாங்கியதாக கூறி 20 அடி ஆட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்து 3 சென்ட் நிலத்தை சுற்றி வேலிகல் நட்டு சென்று உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும். 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கி உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப் பட்டவர்கள் கூறும்போது, கடந்த 70 ஆண்டு காலமாக இந்த பகுதியில் 40-க்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு இந்த இரண்டு நிலத்தில் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். மீதம் இருக்கும் இடங்களில் விவசாயம் செய்து வருகிறோம். மேலும் நாங்கள் அனைவரும் கூலி செய்து வருகின்றோம். எங்களுக்கு வேறு ஒரு தொழில் இல்லை. ஆனால் எங்கள் இடத்தில் வேற்று சமூகத்தினருக்கு பட்டா வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாதிக்கின்ற வகையில் அமைந்திருப்பதால் உடனடி யாக அந்த பட்டாவை ரத்து செய்து எங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுக்க ப்பட்டது.
    • அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு உடனடி யாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என திருப்பூர் எம்.பி. சுப்பராய னிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்க ப்பட்டது.

    இதையடுத்து எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடந்தது. அந்த பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த கட்டிட திறப்பு விழா நடந்தது.

    ஆனால் அந்த கட்டிடம் இன்னும் பயன் பாட்டுக்கு விடப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ தேவைகளுக்கு பெருந்துறை மற்றும் ஈரோடு உள்பட அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு பொது மக்கள் அனுப்பி வைக்க ப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக புகார் கூறினர். எனவே அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு உடனடி யாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×