search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

     இருளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு வந்த போது எடுத்தபடம்.

    கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • தற்போது வீட்டின் அருகே பட்டா வாங்கியதாக கூறி 20 அடி ஆட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்து 3 சென்ட் நிலத்தை சுற்றி வேலிகல் நட்டு சென்று உள்ளனர்.
    • அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுாி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட புலிகரை அடுத்த இருள ப்பட்டி காட்டுக் கொட்டாய் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப் பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

    இருளப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் சுமார் அரசுக்கு சொந்தமான 30 ஏக்கா் பரப்பளவில் புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த நிலத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் போயா் சமூகத்தை சோ்ந்த 5 குடும்பத்தினா் சுமாா் 70 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த புறம்போக்கு நிலத்தில் நான்கு பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனா்.

    அதே பகுதி சேர்ந்த வேற்று சமூகத்தை சோ்ந்த ஒருவர் 4 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்து வீடு கட்டி வாழ்ந்து வருகிறாா். இந்நிலையில் வசதி படைத்த நபருக்கு, மீண்டும் 70 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் வீட்டின் அருகே கடந்த 2020ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாவை கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி மூலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நபரின் மகன் ஐடி கம்பெனியில் பணிபுாிந்து வரும் நிலையில் இலவச வீட்டு மனை பட்டா பெரும் அரசு விதிமுறையை மீறி போலியாக வீட்டுமனை பட்டா பெற்றுள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டு களாக தான் பெற்ற வீட்டுமனை அருகே வராமல் தற்போது வீட்டின் அருகே பட்டா வாங்கியதாக கூறி 20 அடி ஆட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்து 3 சென்ட் நிலத்தை சுற்றி வேலிகல் நட்டு சென்று உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும். 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கி உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப் பட்டவர்கள் கூறும்போது, கடந்த 70 ஆண்டு காலமாக இந்த பகுதியில் 40-க்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு இந்த இரண்டு நிலத்தில் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். மீதம் இருக்கும் இடங்களில் விவசாயம் செய்து வருகிறோம். மேலும் நாங்கள் அனைவரும் கூலி செய்து வருகின்றோம். எங்களுக்கு வேறு ஒரு தொழில் இல்லை. ஆனால் எங்கள் இடத்தில் வேற்று சமூகத்தினருக்கு பட்டா வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு பாதிக்கின்ற வகையில் அமைந்திருப்பதால் உடனடி யாக அந்த பட்டாவை ரத்து செய்து எங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×