என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோடா"

    • மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது.
    • வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்றுள்ளது. அப்போது பதேர்வா - சம்பா சாலையில் உள்ள கன்னி டாப் என்ற இடத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து நடந்த உடனேயே, காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவதற்காக ராணுவம், காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. உள்ளூர் மக்களும் உதவியுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    படுகாயமடைந்த சில வீரர்கள் சிறப்பு சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஆறு வீரர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. 

    "தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நமது துணிச்சலான வீரர்களின் சிறந்த சேவை மற்றும் உயர்ந்த தியாகத்தை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    • பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு.
    • பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்றிரவு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


    கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கத்துவாவில் பொது மக்கள் மீது பயங்கராவதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர், இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.


    இந்த சம்பவம் குறித்து பேசிய ஜம்முவின் ஏ.டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின், "நம் நாட்டில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நமது அருகில் உள்ள விரோதிகளின் முயற்சி தான் இது. இந்த தாக்குதல் புதிய ஊடுறுவல் போன்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான், மற்றொருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது," என தெரிவித்தார்.

    ×