search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி காயம்"

    • எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.
    • போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் அருகே பந்தார அள்ளியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 40). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 28-ம் தேதி கொள்ளுபட்டியில் உள்ள தனது மனைவியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் - திப்பம்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்,

    தெல்லன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து இன்று சிவலிங்கம் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரிமங்கலம் போலீ சார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
    • அவருக்கு மூக்கு, வாய், இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58) கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20-ம் தேதி மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது மார ண்ட அள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அதில் அவருக்கு மூக்கு, வாய், இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து மாரண்ட அள்ளி போலீசில் புகார் அளிக்கப்படடது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் உள்ளது.
    • ஜெஸ்சியை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் உள்ளது. இங்கு தினந்தோறும் காலையில் தேயிலை பறிப்பதற்காக ஏராளமான தொழிலாளர்கள் பணிக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை நாலுமுக்கு தேயிலை தோட்டத்திற்கு ஜெஸ்சி (வயது 55) என்ற பெண் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்தது.

    இதனால் ஜெஸ்சி அலறி ஓடினார். அப்போது அவரை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு மாஞ்சோலையில் உள்ள எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பார்த்தசாரதி மீது அரசு பஸ் மோதியது.
    • இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் ஓட்டுனர் முனுசாமி போலீசில் புகார் செய்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், புழுதிகரையை சேர்ந்தவர் முனுசாமி (வயது53). இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தருமபுரியில் இருந்து சிந்தல்பாடி வழியாக சேலம் நோக்கி பேருந்து ஓட்டிச் சென்றார்.

    அப்போது சிந்தல்பாடி அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பார்த்தசாரதி மீது அரசு பஸ் மோதியது. இதில் பார்த்தசாரதிக்கு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் ஓட்டுனர் முனுசாமி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×