search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணிப்பைகள்"

    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் தாலுகாவில் 80,420 பேருக்கு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ வெல்லம்,ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள்.

    பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேசன் கடைகளில்,80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி தொடங்கியது. அந்தந்த பகுதி ரேசன் கடைஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது. இந்த முறை துணிப்பை வழங்கப்படாது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் துணிப்பை எடுத்து வந்து பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×