search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துக்க வீடு"

    எருமப்பட்டி அருகே, துக்க வீட்டுக்கு வந்த பட்டதாரி பட்டாசு வெடித்து பரிதாபமாக இறந்தார்.
    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டியை சேர்ந்த மாராயி (வயது 70) என்ற மூதாட்டி இறந்து போனார்.

    இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாராயியின் உறவினரான பெரம்பலூர் பகுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் எம்.எஸ்சி. முதுகலை பட்டதாரியான அன்பரசன் (28) வந்திருந்தார்.

    அப்போது பட்டாசு வெடித்த அன்பரசன், மீதி பட்டாசை கையில் வைத்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறிபட்டு பட்டாசு வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த அன்பரசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். துக்க வீட்டுக்கு வந்த பட்டதாரி பட்டாசு வெடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    துக்க வீடு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது 24). துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் வந்தார். பின்னர் மாலையில் அவர் ஊருக்கு புறப்பட்டார்.

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் கோவிலூர் அரசு விதைப் பண்ணை அருகே வந்த போது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென திரும்பியுள்ளது.

    இதனை எதிர்பார்க்காத முருகன், தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது தந்தை மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×