search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபா கர்மாகர்"

    • ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
    • தீபா கர்மாகரின் தடை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியாமல் இருந்துவந்தது.

    இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைதீபா கர்மாகர். திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர், கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4-வது இடம் பிடித்தார். இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

    இந்நிலையில், அவர் ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர் எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

    தீபா கர்மாகரின் இடைக்கால தடை பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு மௌனம் காத்துவந்தது. அதனால் தீபா கர்மாகரின் தடை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியாமல் இருந்துவந்தது.

    இந்த தடை குறித்து தீபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் பிஷ்வேஷ்வர் நந்தி ஆகியோரும் தெளிவுபடுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், தீபா கர்மாகருக்கு ஊக்கமருந்து விவகாரத்தில் 21 மாதங்கள் தடை விதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி. வரும் ஜூலை 10 வரை இந்த தடை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×