search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை நீதிமன்றம்"

    பைக் மோதி முதியவர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி (62). கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் காசி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த காசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த நூங்கம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சத்தியராஜிடம் (23) விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் விபத்து ஏற்படுத்திய சத்தியராஜிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து சத்தியராஜை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
    பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய பெண் மீண்டும் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ரஷிய பெண் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீலகண்டன், பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தேவநாதன் விசாரணை நடத்தினார்.

    மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக ரஷிய பெண் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    ×