search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி வருகை"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா நாளை திருப்பதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் சிறிசேனா 17-ந் தேதி சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக, தன் மனைவி ஜெயந்தி புஷ்பகுமரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் அவர் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு செல்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். 17-ந் தேதி அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாத பூஜையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சிறிசேனா பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

    இலங்கை அதிபர் ஆன பிறகு அவர் திருப்பதி கோவிலுக்கு வருவது, இது 3-வது தடவை ஆகும்.   #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple 
    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். #RahulGandhi #Tirupati
    திருப்பதி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக அவர் திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளார்.

    மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாரக ராமா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். கூட்டத்தில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேச உள்ளார். கூட்டம் முடிந்தவுடன் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு முதன் முறையாக திருப்பதி கோவிலுக்கு வர உள்ளார்.

    இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான மெய்யப்பன் திருப்பதியில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
    ×