search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு கும்பல்"

    • திருட்டு கும்பல் தலைவனை பிடிக்க மதுரைக்கு விரைந்துள்ள போலீசார்
    • ஆம்னி வேனில் பின்தொடர்ந்து கைவரிசை

    கள்ளக்குறிச்சி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டது. இந்த லாரியை திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த முத்துமணி (வயது 45) என்பவர் ஓட்டிவந்தார். தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி வழியாக வேலூர் செல்லும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பினார்.

    அப்போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்ப ட்டிருந்தது. இத்தகவலை டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார். அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கினர். இதில் 45 பெட்டிகளை காணவில்லை. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்தை கண்டறிந்தனர்.

    இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்துள்ளனர். எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டி ல்களை கொள்ளையடித்து, வேனில் ஏற்றிச் சென்று அனைவரும் பிரித்துக் கொண்டதாக கூறினார்கள். இதனையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார், மதுபாட்டில்களை திருடும் கும்பல் தலைவன் பொட்ராசு மற்றும் 4 பேரை பிடிக்க மதுரை விரைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை திருடப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரூ.3,000 பணத்தை எடுத்து சென்றுவிட்டனர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அருகே உள்ள கீழ்வீராணம் அடுத்த சூரைகுளம் ரோட்டு தெருவை சோ்ந்தவா் சரோஜா (75). இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களில் குடும்பத்தி னருடன் வசித்து வருகின்றனா்.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்க்கு முன் சரோஜாவின் கணவா் இறந்துவிட்டார். சரோஜா மட்டும் தனியாக வசித்து வருகின்றாா்.

    இந்நிலையில் தனியாக இருப்பதால் அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு நேற்று இரவு தூங்க சென்றுள்ளாா்.

    நள்ளிரவில் வீடு புகுந்த திருட்டு கும்பல் பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை, ரூ.3,000 பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி நகரில் ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் திருடிச் சென்றனர்.

    கோவில்களில் திருட்டு

    இதேபோல ஆரணிப்பா ளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலும் பூட்டை உடைத்து மர்ம கும்பல் உண்டியலை தூக்கிச் சென்றனர்.

    மேலும் ஆரணி - சேத்துப் பட்டு நெடுஞ்சாலையில் சக்தி நகரில் அமைந்துள்ள முக்கிய அம்மன் கோவிலிலும் உண்டியல் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர்.

    கோவில்களில் திருட்டை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச் சந்திரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், கொள்ளையர்கள வேலூர் ஓட்டேரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20), 17 வயது சிறுவன் மற்றும் வந்தவாசியை அடுத்த கீழ்கொவளைவேடு பகுதியை சேர்ந்த பிரபுதேவா (22) என்பது தெரியவந்தது.

    அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக கோவில் உண்டியல்களில் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.

    ைகதான 3 பேரையும் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தனுஷ், பிரபுதேவா ஆகியோரை வேலூர் சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் பாராட்டினார்.

    ×