search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திக்விஜய்சிங்"

    • கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது.
    • ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு அது இடிந்து விழுந்துள்ளது.

    போபால்:

    குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததற்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு குறித்து பிரதமர் மோடி குறை கூறியிருந்தார். தற்போது மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது, ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போதே நர்மதா கால்வாய் உடைந்து விழுந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார்.
    • திக்விஜய் சிங் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க மறுத்ததால் அந்த பதவிக்கான தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட்டை நிறுத்த மேலிடம் முடிவு செய்தது. கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்-மந்திரியாக்கவும் சோனியா முடிவு செய்தார்.

    இதற்கு கெலாட் உடன்படவில்லை. முதல்-மந்திரி பதவியை விட்டு விலக மறுத்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார்.

    அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவர் தேர்தலில் நிறுத்த அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக சோனியா காந்தி மூத்த நிர்வாகிகளுடன் 2 தினங்களாக ஆலோசனை நடத்தினார்.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இதை அவர் அதிகார பூர்வமாக இன்று தெரிவித்தார்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார். நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் திக் விஜய் சிங் தெரிவித்தார்.

    அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். அவரும் நாளை மனு தாக்கல் செய்கிறார்.

    இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் போட்டியிடுகிறார்கள்.

    • ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதலால் அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல்.
    • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் நாளை வேட்புமனு தாக்கல்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில், இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்கி உள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரசிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சோனியா காந்தி, கெலாட் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த தேர்தலில் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.  நாளை காலை 11 மணிக்கு சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய்சிங் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இன்று காலை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னதாக அவர் கேரள மாநிலத்தில் ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்தார். வேட்புமனு தாக்குதலுக்காக நேற்று கேரளாவில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ஒரே விமானத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலும் டெல்லி சென்றுள்ளார்.

    ×