search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்பூசணி விற்பனை"

    • கோடை காலம் தொடங்கி விட்டநிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூ சணி பழங்களின் வரத்து இப்பகுதியில் அதிகரித்து உள்ளது.

    பரமத்திவேலூர்:

    கோடை காலம் தொடங்கி விட்டநிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலில் இருந்து தப்பிக்க வெள்ளரி மற்றும் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சுற்று வட்டார பகுதி களில்நிலவும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இதனால், கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூ சணி பழங்களின் வரத்து இப்பகுதியில் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் கடலூர், திண்டிவனம், விழுப்பு ரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது. அதனால் பரமத்தி வேலூர், பர மத்தி பொத்த னூர், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அமோ கமாக விற்பனை நடை பெறு கிறது. தர்பூசணி பழங்க ளை பொது மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ 25 ரூபாய் வரை விற்பனை செய்ய ப்ப டு கிறது. ஒரு துண்டு தர்பூசணி பழம் ரூ.10 வரை விற்பனை ஆகிறது

    • ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
    • சீசன் தொடங்கும் முன்பே காங்கயத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள தர்பூசணி பழ கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது தர்பூசணி விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிக நீர்ச்சத்துள்ள தர்பூசணி பழத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பொதுவாக கோடைகால சீசன் தொடங்கும் போது தர்பூசணி பழங்கள் அதிக அளவு விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது சீசன் தொடங்கும் முன்பே காங்கயத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    ×