search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை"

    போச்சம்பள்ளி மற்றும் பாரூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்ற 4 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி  மவாட்டம், போச்சம்பள்ளி மற்றும் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் மணி, ராஜா மற்றும் போலீசார் போச்சம்பள்ளி பஸ்நிலையம், அரசம்பட்டி பஸ் ஸ்டாப் போன்ற பகுதியில் ரோந்து சென்றனர்.
     
    அப்போது அந்த பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றுகொண்டிருந்த குள்ளம்பட்டி செல்வ குமார்(34), சுரேஷ்குமார்(36), வாடமங்கலம் சக்தி (35), சாம்ராஜ் (35) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது.  

    இதில் சக்தி என்பவர் அரசம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கம்ப்யூட்டர் மூலம் லாட்டரி சீட்டை பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.21 ஆயிரத்து 670-யை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை நாகரசம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள வேலம்பட்டி பச்சையம்மன் கோவில் முன்பு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரோந்தில் ஈடுபட்ட நாகரசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் போலீசார் வேலம்பட்டியில் இருந்து சந்தூர் நோக்கி செல்லும்போது வேலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பச்சையம்மன் கோவில் முன்பு இருந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர்.

    பின்னர் அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அவர்களை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. அவர்களை நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்களில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் கோட்டைகோவில் தெருவை சேர்ந்த சாகுல் (வயது 34) மற்றும் காவேரிப்பட்டிணம் அடுத்த சவுட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ராஜாகுயில் என்ற பெயர் கொண்ட 8 லாட்டரி சீட்டுகள் மற்றும் 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×