search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கிரிக்கெட் சங்கம்"

    டெல்லி கிரிக்கெட் நலனிற்காக டிடிசிஏ கிரிக்கெட் கமிட்டியில் பதவியை ராஜினாமா செய்தேன் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #DDCA #Sehwag
    இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த கமிட்டியில் ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.

    டெல்லி கிரிக்கெட்டில் முன்னேற்றம் கொண்டு வர முக்கியமான ஆலோசனைகள் வழங்குவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மனோஜ் பிரபாகரை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.



    இந்நிலையில் சேவாக் உள்பட மூன்று பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். டெல்லி கிரிக்கெட்டின் நலன் கருதியே ராஜினா செய்துள்ளதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

    ‘‘டெல்லி கிரிக்கெட் வளர்ச்சி பெற ஆலோசனைகைள் வழங்குவதே கிரிக்கெட் கமிட்டியில் உள்ள எங்களுடைய பணி. ஆனால், நாளுக்கு நாள் எங்களுக்கு மற்ற வேலைகள் அதிக அளவில் வருவதால் இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாங்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்தோம்’’ என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
    டெல்லி கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடருக்கு தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் குளுஸ்னர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். #DDCA
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கேன்சி குளுஸ்னர். இவரை டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி ரஞ்சி அணி விளையாடும் ஒருநாள் தொடருக்கு ஆலோசகராக நியமித்துள்ளது.

    இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராஜத் ஷர்மா கூறுகையில் ‘‘குளுஸ்னர் டெல்லி அணியின் ஒருநாள் தொடருக்கான டெல்லி ரஞ்சி அணி மற்றும் உள்ளூர் டி20 தொடருக்கான அணியின் ஆலோசகராக செயல்படுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.



    விஜய் ஹசாரே மற்றும் தியோதர் டிராபி ஆகிய தொடர்கள் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்குகிறது. உள்ளூர் டி20 தொடர் 2019 பிப்ரவரியில் தொடங்குகிறது. குளுஸ்னர் தலைமை பயிற்சியாளர் மற்றும் இதர பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

    46 வயதாகும் குளுஸ்னர் 171 ஒருநாள் போட்டியில் 2 சதம், 19 அரைசதங்களுடன் 3576 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 41.10 ஆகும். 192 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    டெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் புதிய நபர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு போன்ற விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.

    இந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.



    காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    டெல்லி கிரக்கெட் சங்க தலைவருக்கான தேர்தலில் மூத்த பத்திரிகையாளர் ராஜத் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார். #DDCA #RajatSharma
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தலைவருக்கான பதவிப் போட்டியில் மூத்த பத்திரிகையாளரான ராஜத் ஷர்மா முன்னாள் கிரிக்கெட் வீரரான மதன் லாலை 517 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ராஜத் ஷர்மா 1531 வாக்குகளும், மதன் லால் 1004 வாக்குகளும் பெற்றனர். அத்துடன் ராஜத் ஷர்மா அணி 12 பதவிகளும் வெற்றி வாகை கூடியது.

    துணைத் தலைவருக்கான போட்டியில் பிசிசிஐயின் பொறுப்பு தலைவரான சிகே கண்ணாவின் மனைவி ஷாஷி ராகேஷ் பன்சாலிடம் தோல்வியடைந்தார். ராகேஷ் பன்சால் 1364 வாக்குகளும், ஷாஷி 1086 வாக்குகளும் பெற்றனர். சிகே கண்ணாவின் மனைவி தோல்வியடைந்ததன் மூலம் சுமார் 30 ஆண்டுகள் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் சிகே கண்ணா செலுத்தி வந்த ஆதிக்கம் முடிவிற்கு வருகிறது.



    செயலாருக்கான பதவியில் வினோத் திஹாரா வெற்றி பெற்றார். துணைச் செயலாளர் பதவியில் ராஜன் மன்சண்டா வெற்றி பெற்றார்.
    ×