search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகோர் ஜெ.டி.பி."

    இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. கார்களின் விநியோகம் துவங்கியது. #Tatamotors #Cars
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. கார்களின் விநியோகம் துவங்கியது.

    இந்தியாவில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. கார் மாடல்களின் விலை முறையே ரூ.6.39 லட்சம் மற்றும் ரூ.7.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஜெ.டி.பி. என்பது ஜெயம் டாடா பெர்ஃபார்மன்ஸ் என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் மற்றும் கோயமுத்தூரை சென்ற ஜெயம் ஆட்டோமேட்டிவ்ஸ் நிறுவனங்கள் இணைந்து புதிய கார் மாடல்களை வெளியிட்டுள்ளன. இந்த கார் மாடல்கள் ஜெயம் டாட்டா ஸ்பெஷல் வெயிகில்ஸ் (JTSV - Jayem Tata Special Vehicles) என அழைக்கப்படுகிறது.

    புதிய டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்கள் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வடிவமைப்பை பொருத்த வரை காரின் முன்பக்கம் அதிரடி தோற்றம் கொண்ட பம்ப்பர், டூயல்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பொனேட்டில் ஏர் ஸ்கூப் மற்றும் முன்பக்க கிரிலின் மீது ஜெ.டி.பி. பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இரு ஜெ.டி.பி. மாடல்களிலும் 15-இன்ச் டைமன்ட் கட் டூயல்-டோன் அலாய் வீல்கள், முன்பக்க ஃபென்டர் வென்ட்கள், சைடு ஸ்கர்ட்களில் ஜெ.டி.பி. பேட்ஜ் கொண்டிருக்கிறது.

    காரின் பின்புறம் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர், எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர், டுவின் பேரெல் எக்சாஸ்ட் மற்றும் ஜெ.டி.பி. பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப் கொண்டிருப்பதோடு காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க ஸ்டான்டர்டு மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

    உள்புறத்தில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் முழுமையான பிளாக் தீம், சிவப்பு நிற அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. சீட்களிலும் ஸ்போர்ட் ஹெக்சாகோனல் கிராஃபிக்ஸ் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. காரின் ஸ்போர்ட் தன்மையை அதிகப்படுத்த உள்புறத்தில் மெஷின்டு அலுமினியம் பெடல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கேபினில் கனெக்ட்நெக்ஸ்ட் (ConnectNext) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 8-ஸ்பீக்கர் ஹார்மன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் 1.2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 112 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. #Tatamotors #Cars
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. என்ற பெயரில் புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. #TigorJTP #TiagoJTP

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது. டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. என அழைக்கப்படும் புதிய கார் மாடல்களின் விலை முறையே ரூ.6.39 லட்சம் மற்றும் ரூ.7.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஜெ.டி.பி. என்பது ஜெயம் டாடா பெர்ஃபார்மன்ஸ் என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் மற்றும் கோயமுத்தூரை சென்ற ஜெயம் ஆட்டோமேட்டிவ்ஸ் நிறுவனங்கள் இணைந்து புதிய கார் மாடல்களை வெளியிட்டுள்ளன. இந்த கார் மாடல்கள் ஜெயம் டாட்டா ஸ்பெஷல் வெஹிகில்ஸ் (JTSV - Jayem Tata Special Vehicles) என அழைக்கப்படுகிறது.

    புதிய டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்கள் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வடிவமைப்பை பொருத்த வரை காரின் முன்பக்கம் அதரடி தோற்றம் கொண்ட பம்ப்பர், டூயல்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பொனேட்டில் ஏர் ஸ்கூப் மற்றும் முன்பக்க கிரிலின் மீது ஜெ.டி.பி. பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இரு ஜெ.டி.பி. மாடல்களிலும் 15-இன்ச் டைமன்ட் கட் டூயல்-டோன் அலாய் வீல்கள், முன்பக்க ஃபென்டர் வென்ட்கள், சைடு ஸ்கர்ட்களில் ஜெ.டி.பி. பேட்ஜ் கொண்டிருக்கிறது. 

    காரின் பின்புறம் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர், எல்.இ.டி. டெயில் லைட் கிளஸ்டர், டுவின் பேரெல் எக்சாஸ்ட் மற்றும் ஜெ.டி.பி. பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப் கொண்டிருப்பதோடு காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க ஸ்டான்டர்டு மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

    உள்புறத்தில் டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் முழுமையான பிளாக் தீம், சிவப்பு நிற அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. சீட்களிலும் ஸ்போர்ட் ஹெக்சாகோனல் கிராஃபிக்ஸ் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச்சிங் செய்யப்பட்டுள்ளது. காரின் ஸ்போர்ட் தன்மையை அதிகப்படுத்த உள்புறத்தில் மெஷின்டு அலுமினியம் பெடல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    கேபினில் கனெக்ட்நெக்ஸ்ட் (ConnectNext) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 8-ஸ்பீக்கர் ஹார்மன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் 1.2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 112 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்கியூ செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. #Tatamotors #TigorJTP #TiagoJTP
    ×