search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதி மணி"

    • ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.
    • கரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இணக்கம் இல்லாத நிலையும் இருக்கிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணியின் வெற்றிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். பின்னர் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் வெடித்தது.

    அப்போதே மீண்டும் தி.மு.க. கூட்டணியில் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று பேச்சு அடிப்பட்டது. அது விரைவில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.

    ஆகவே தனக்கான ரூட்டில் சென்று காதும் காதும் வைத்தர்போல் மீண்டும் கரூர் தொகுதியை பெற்று அனைவரையும் வியக்க வைப்பார் என்று அம்மணியின் தீவிர ஆதரவு கதர் சட்டைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    அதே நேரம் கரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இணக்கம் இல்லாத நிலையும் இருக்கிறது.

    • போராட்டத்தின் போது போலீஸ் தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
    • டெல்லி மருத்துவமனையில் ஜோதிமணி எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஆர்.எம்.எல் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தின் போது போலீஸ் தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் ஜோதிமணி எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஆர்.எம்.எல் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ×