என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெஃப்ரி எப்ஸ்டீன்"

    • இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
    • FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் வெளியிடப்பட்ட ஆவணங்களில் எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

    அந்த வகையில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இந்திய பெண்(அல்லது சிறுமி) இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த திட்டத்தின் கீழ் இந்திய பெண் ஒருவருக்கு நிதியுதவியும், மனநல ஆலோசனையும் அளிக்க அவரை அமெரிக்க அதிகாரிகள் தேடியுள்ளனர்.

    2020 ஜனவரி 13-ஆம் தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், இந்தியாவில் இருக்கும் இந்தப் பெண்ணைக் கண்டறியும் அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிகள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவரது முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கிடைத்தால், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த மின்னஞ்சலில், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்கள் கறுப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களை FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி மூலம் அந்தப் பெண்ணிற்கு உதவி வழங்க அவரைத் தேடி வந்ததாகத் தெரியவந்துள்ளது.

    2019 ஆகஸ்ட் மாதம் எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

    இந்தத் தகவல் எப்ஸ்டீனின் பாலியல் சுரண்டல் நெட்வொர்க் இந்தியா வரை பரவியிருந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.  

    • பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
    • எப்ஸ்டீன் கோப்பில் 169 முறை தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்றிருந்தது

    அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது.

    இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் திபெத்திய மதகுரு தலாய் லாமா உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.

    சமீபத்தில் வெளியான கோப்பில் 169 முறை தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருநாளும் தலாய் லாமா சந்தித்ததில்லை என அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    • பிரதமர் மோடியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது.
    • நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார்.

    அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள்' உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப், பிரதமர் மோடி, தொழிலதிபர் பில் கேட்ஸ் ஆவர்.

    இந்நிலையில் பில் கேட்ஸ் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார். சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், பில் கேட்ஸ் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் அவருக்குப் பாலியல் தொற்று நோய் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

    இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், எப்ஸ்டீன் தன்னை அவதூறு செய்வதற்காகவே அத்தகைய மின்னஞ்சல்களை எழுதியிருப்பார் என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பில் கேட்ஸ்,

    "அவருடன் நான் கழித்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன், நான் அப்படிச் செய்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்," என்று கேட்ஸ் கூறினார். "நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார். நான் அவர் குறிப்பிட்டுள்ளவாறு எந்த மின்னஞ்சலையும் எழுதவில்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் பொய்யானவை. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு வகையில் என்மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார்." என்று தெரிவித்தார்.

    மேலும் எப்ஸ்டீன் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பிறகும் 2011 இல் அவரை சந்தித்ததாக கேட்ஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் ஒருபோதும் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு சென்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார். "அவருடன் நேரத்தைச் செலவிட்டது நான் செய்த முட்டாள்தனம், அவரைத் தெரிந்ததற்காக வருந்தும் பல நபர்களில் நானும் ஒருவன்." என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இதுதொடர்பாக பேசியிருந்த பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, எப்ஸ்டீன் தொடர்பான இந்த ஆவணங்கள் தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    ×