search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூட் ஆண்டனி ஜோசப்"

    • மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
    • இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘2018’.

    மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் '2018'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.


    ஜூட் ஆண்டனி ஜோசப்

    கடந்த 2014-ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஒஷானா' படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களை முழு அளவில் திரையரங்கிற்கு அழைத்து வரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    மலையாளத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்து வரவேற்பை பெற்ற 'ஓம் சாந்தி ஓசானா', மற்றும் 'ஒரு முத்தஸி கதா', 'சாராஸ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப். இவர் தற்போது '2018' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார்.


    ஜூட் ஆந்தனி ஜோசப்

    இந்த படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் மம்முட்டி பேசியதாவது, ''டைரக்டர் ஜூட் ஆந்தனி தலையில் முடி இல்லா விட்டாலும் அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டிரைலர் சிறப்பாக உள்ளது" என்றார்.


    மம்முட்டி

    இதையடுத்து சமூக வலைதளத்தில் ஒரு மூத்த நடிகர், இயக்குனரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பல எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து நடிகர் மம்முட்டி மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இயக்குனர் ஜூட் ஆந்தனி பாராட்டும்போது பேசிய வார்த்தைகளால் சிலர் புண்பட்டு இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    இதற்கு முன்பு இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப், நடிகர் மம்முட்டியை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் என் தலையில் முடி இல்லை என்று எனக்கோ என் குடும்பத்தாருக்கோ வருத்தம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×