search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வமகள்"

    • நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன.
    • தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல்:

    இந்திய அஞ்சல் துறை சார்பில், அம்ரித் பெக்ஸ் பிளஸ் 3 திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலமாக செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் 25 குழந்தைகளுக்கு, நடராஜபுரம் துணை அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கியதற்கான பாஸ் புத்தகத்தினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் பிள்ளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடரா ஜபுரம் துணை அஞ்சலக அதிகாரி சங்கீதா அஞ்சலக இன்சூரன்ஸ் வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வணிக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சேமிப்பு பிரிவு அலுவலர் அனிதா, அழகு நகர் நல சங்க துணைத் தலைவர் மணி ராஜா, செயலாளர் ராமசாமி, பொருளாளர் வீராசாமி, கந்தசாமி, அன்பு மற்றும் ஈசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்கா

    ணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது.
    • முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.

    உடுமலை :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தளி பேரூராட்சிக்குட்பட்ட குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இலவச பதிவு முகாம் நடந்தது. ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி, அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை மற்றும் தளி பேரூராட்சி சார்பில் இந்த முகாம் நடந்தது. அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் .

    இதில் மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், சண்முகசுந்தரம் எம்.பி., மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, பேரூராட்சி தலைவர் உதயகுமார், துணைத்தலைவர் செல்வன் பிரியா, நர்சிங் கல்லூரி முதல்வர் தவசிமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி வேதியியல் துறை தலைவர் மலர்வழி ஒருங்கிணைத்தார். முகாமில் ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தனர்.

    • சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள்.
    • செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள். உங்களின் செல்ல மகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்கி சிறந்த பரிசினை இன்றே அளியுங்கள்‌. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் வருகிற ஆகஸ்ட் 15.8.2022- க்குள் நீங்கள் துவங்கும் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கின் விவரங்களை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நாமக்கல் கோட்டம் நாமக்கல்-637001 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    குழந்தையின் பெயர், செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும் . மேலும் 6385377754 என்ற செல்போண் எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×