search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்யப்பட்ட"

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
    • குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே சொத்த விளை ஒசரவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்ற தாத்தா செந்தில் (வயது 63). இவர் வடசேரியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து செந்திலுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் செந்திலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவிலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் இன்று காலை சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மீது குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. தாத்தா செந்தில், வெள்ளை செந்திலை தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் சுற்றி தெரியும் ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு போலீசார் அதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றசெயலில் ஈடுபடும் எந்த ரவுடியும் தப்பிக்க முடியாது என்றார்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.
    • இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரட்டை மடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று அரசு சட்டம் வைத்துள்ளது. ஆனால் அதையும் மீறி மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்களை பிடித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த படகு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலை மண்எண்ணை வழங்கி வருகிறது. தற்பொழுது புதிதாக விண்ணப்பித்தவர் பலருக்கும் மண்எண்ணை வழங்காமல் உள்ளனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகும் மண்எண்ணை வழங்கப்படவில்லை. உடனடியாக மண்எண்ணை வழங்காவிட்டால் மீனவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேல்மிடாலம் பகுதியில் மீன் பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும். கேசவன் புத்தன் துறை பகுதியில் சேதமடைந்த தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும். ஏ.வி.எம். கால்வாயை தூர்வார வேண்டும். கடற்கரை கிராமங்களில் பழுதான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரி கூறுகையில், குமரி மாவட்டத்தில் இரட்டை மடி மீன் வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். 14 நாட்டிங்கல் வரை மீன்துறை அதிகாரிகள் சென்று கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தேங்காய்பட்டினத்தில் குஞ்சு மீன்களை பிடித்து வரும் படகுகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேல்மிடாலத்தில் ரூ.35 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கேசவன் புத்தன் துறையில் தூண்டில் வளைவு சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.
    • சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த 9-ந்தேதி மிஷின் காம்பவுண்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். ஏசுதாசின் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், கிறிஸ்து நகரை சேர்ந்த விஜயன், திருப்பதி சாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷின் காம்பவுண்ட்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் தங்கஜோஸ் (25) என்பவரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 பேரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்பு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது உறவுக்கார பெண்ணுக்கும், ஏசுதாசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக எனக்கும், அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏசுதாசனும், அவரது மகனும் என்னை தாக்கி னார்கள். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஏசுதாசனை பழிக்குப்பழியாக குத்தி கொலை செய்தோம். கொலை செய்த பிறகு சென்னைக்கு ரயிலில் தப்பி சென்றோம். பின்னர் அங்குள்ள இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தோம். போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன், மணிகண் டன் ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் இவர்களது பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×