search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச் சூழல்"

    • வீரமரசன்பேட்டை கிராமத்தில் மாதிரி கிராம சுற்றுச் சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு நடந்தது.
    • மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2022-23 மாதிரி கிராம சுற்றுச் சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு பயிற்சி பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா தலைமையில் நடைபெற்றது.

    வேளாண் அலுவலர் சுரேஷ் வரவேற்றார்.

    தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீர்வள நில வள திட்ட கையேயட்டினை வழங்கி நீர்வள நில வள திட்ட முக்கியத்துவங்களை எடுத்து கூறினார்.

    வேளாண்கல்லூரி நோயியல் பேராசிரியர் ராமலிங்கம், பூச்சியல் துறை பேராசிரியர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை தொழில்–நுட்பங்களை விளக்கி பேசினார்கள்.

    வீரமரசன்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்கள் விவசாயிகளுக்கு மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    தமிழ்நாடு நீர்வள நிலவளம் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு தகவல்கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் தொலைக்காட்சி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி, மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    துணை வேளாண்மை அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் எழிலமுது மற்றும் அட்மா திட்டத்தின் பாலமுருகன் மற்றும் பலர் செய்து இருந்தனர்.

    ×