search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீசெம் மதுரை பாந்தர்ஸ்"

    • டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தொடர்ந்து ஆடிய மதுரை 108 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 18.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.

    மதுரை சார்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 11 ரன்னும், ஜெகதீசன் கவுசிக் 19 ரன்னும் எடுத்தனர். சுரேஷ் லோகேஷ்வர் நிதானமாக ஆடி 32 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், மதுரை அணி 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வென்றது. ஸ்வப்னில் சிங் 25 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது மதுரை அணி பெற்ற 3வது வெற்றி ஆகும்.

    • திருச்சி அணியில் அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.
    • மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சேலம்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.

    பிரான்சிஸ் 18 ரன்கள், டேரில் பெராரியோ 21 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீர்ர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.

    ×