search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைக்கு"

    • குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    கன்னியாகுமரி:

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் நினைவு தினம் இன்று அனு சரிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலெக்டர் ஸ்ரீதர், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, நேச மணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் மார்சல் நேசமணி. அவருடன் பயணித்த பல்வேறு தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான தியாகங்கள், தியாக செம்மல்களை வணங்குகிறேன்.

    தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை பெருக்குவதுடன் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆவின் விலை ரூ.30 குறைத்ததுடன் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 அதிகமாக வழங்கினார். தற்பொழுது ஆவினில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து கூறுவது அவரவர் அடிப்படை உரிமை என்று கூறினார்.

    • அலங்காநல்லூர் அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • அழகாபுரி, அ.புதுப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் கோவிலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிசந்திரன் தலைமையில் மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    அழகாபுரி, அ.புதுப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் சம்பத், நகர் செயலாளர் அழகுராஜ், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், ஒன்றிய இளைஞரணி சுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், அழகாபுரி கிளை செயலாளர்கள் ரகுபதி, பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ஜெயராமன், பெரிய இலந்தைகுளம் கிளை செயலாளர் ஜெகதீஷ், செந்தில்குமார், கோவிலூர் கிளை செயலாளர் நடராஜன், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×