search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதானிய"

    • 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணை பேராசிரியர் சரவணன், வேளாண்மை உதவி அலுவலர் கார்த்திக், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோகிலப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் விவசாயிகளுக்கு, செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

    • உலக சுகாதார மையம் 2023-ம் ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்திருந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை என்.வி.கே.எஸ்.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செய்து காட்சிபடுத்தினார்கள்.

    திருவட்டார்:

    உலக சுகாதார மையம் 2023-ம் ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்திருந்தது. இதையடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் கம்பு, சோளம், குதிரை வாலி உட்பட சிறு தானியங்களால் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை என்.வி.கே.எஸ்.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செய்து காட்சிபடுத்தினார்கள். இந்த உணவு வகைகளை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சின் ஒரு பகுதியாக என்.வி.கே.எஸ்.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் சிறுதானிய உணவு கவுண்டரை திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் முன்னிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்.வி.கே.எஸ்.டி. கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், மாநகராட்சி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள், என்.வி.கே.எஸ்.டி. மேல்நிலைபள்ளி ஆற்றூர் முதல்வர் விமலாஸ்ரீ, கல்வியியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீலதா, என்.வி.கே.எஸ்.டி. வித்யாலயா வெட்டு வெந்தி முதல்வர் அனிதா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரஷோப் மாதவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×