search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோர ஆக்கிரமிப்புகள்"

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அளவு கற்களை நட்டு வைத்துள்ளனர்.
    • இந்த சாலை குறுகிய சாலையாக மாறி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    பல்லடம்:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு சாலையிலிருந்து நொச்சிப்பாளையம், அல்லாளபுரம் வழியாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருப்பூர் - தாராபுரம் சாலையை இணைக்கிறது. இந்த பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள், குடியிருப்பு உள்ளன. இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அளவு கற்களை நட்டு வைத்துள்ளனர். ஆனால் அளவு கற்களை மீறி சிலர் ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்கள். இதனால் இந்த சாலை குறுகிய சாலையாக மாறி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இப்படியே ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அந்த சாலை குறுகிய சாலையாக மாறி விடும். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக வாகன நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும்.
    • போதிய கழிவறை வசதி கூட இல்லாமல், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக ஒகேனக்கல் இருந்து வருகிறது.

    இங்கு தருமபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

    அதேபோல அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருகின்றனர்.

    இந்நிலையில் ஒகேன க்கல்லில் பிரதான வீதிகளில், சாலையோர கடைகள் மற்றும் முக்கிய ஓட்டல் கடைக்காரர்கள், பாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர்.

    மேலும் சாலையில் இருபுறங்களும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதையில் நடந்து செல்லவே வழி இல்லாத அளவிற்கு அதிக இடையூறாக உள்ளது.

    மேலும் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ் வாகனமும் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையை கவனத்தில் கொண்டு சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான பாதை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    மேலும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக வாகன நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலையும், வாகன நெரிசலையும் சீர் செய்ய முடியும்.

    தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்களின் வசதிக்காக எவ்வித அடிப்படை வசதி களையும் சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வில்லை. போதிய கழிவறை வசதி கூட இல்லாமல், சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் பரிசல் இயக்குதல், மீன் சமையல் உள்ளிட்ட பகுதிகளில் முறையான கட்டணங்களை கடைப்பிடிப்பதில்லை உள்ளிட்ட ஏராளமான குற்ற ச்சாட்டுகளை சுற்றுலாப் பயணிகள் வைக்கின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வணிக நிறுவனங்கள், நடை பாதை கடைகள் உள்ளிட்டவை இயங்கி வந்தன.
    • பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன.

    பாலக்கோடு.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெரு, பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, தக்காளிமண்டி வரை நீண்டகாலமாக நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வணிக நிறுவனங்கள், நடை பாதை கடைகள் உள்ளிட்டவை இயங்கி வந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் சாக்கடை கால்வாய்கள் முழுவதும் கான்கிரீட்டால் மூடப்பட்டுள்ளதால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடியாமல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியது.

    இதனால் ஆக்கிரமிப்புக்களை அகற்றகோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன. இதில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றினர்.

    மேலும் இதற்கு மேல் சாலைகளை ஆக்கிரமித்து செயல்படும் வணிக நிறுவனங்கள், நடைபாதை கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

    சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை விரிவு செய்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×