என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோர ஆக்கிரமிப்பை படத்தில் காணலாம்.
பல்லடம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அளவு கற்களை நட்டு வைத்துள்ளனர்.
- இந்த சாலை குறுகிய சாலையாக மாறி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
பல்லடம்:
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு சாலையிலிருந்து நொச்சிப்பாளையம், அல்லாளபுரம் வழியாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருப்பூர் - தாராபுரம் சாலையை இணைக்கிறது. இந்த பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள், குடியிருப்பு உள்ளன. இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்து அளவு கற்களை நட்டு வைத்துள்ளனர். ஆனால் அளவு கற்களை மீறி சிலர் ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்கள். இதனால் இந்த சாலை குறுகிய சாலையாக மாறி வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இப்படியே ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அந்த சாலை குறுகிய சாலையாக மாறி விடும். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.