search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுந்தரராஜன்"

    • நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது.
    • பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. அறிக்கை.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதை தொடர்ந்து இன்று (ஜனவரி 8) நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்து இருந்தார். அதன் படி நாளை பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

     


    அதில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்."

    "ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும் அரசு ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்."

    "அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு. இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
    • பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

    ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    ஆனால், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சிஐடியு சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்" என்று கூறினார்.

    • கன்னியாகுமரியில் நடந்த மாநில மாநாட்டில் முடிவு
    • 141 பேர் கொண்ட மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில தலைவராக சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

    சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. பின்னர் நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் சவுந்தரராஜன் மீண்டும் தலைவராகவும், சுகுமாறன் பொது செயலாளராகவும், மாலதி சிட்டிபாபு பொருளாளராகவும், உதவி பொது செயலாளர்களாக குமார், திருச்செல்வன், கண்ணன், ஆறுமுக நயினார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக சிங்காரவேலு, விஜயன், சந்தரன், கணேசன், உதயகுமார், கருப்பையன், கிருஷ்ணமூர்த்தி, பொன்முடி, தெய்வராஜ், சிங்காரன், ஜானகிராமன், மகாலட்சுமி, மகேந்திரன், டெய்சி, செண்பகம், ரங்கராஜன், ஐடா ஹெலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    மாநில செயலாளர்களாக முத்துகுமார், ரசல், தங்க மோகனன், திருவேட்டை, ஜெயபால், ராஜேந்திரன், கோபிகுமார், ரங்கராஜ், பாலகிருஷ்ணன், நாகராசன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி, குமார், சிவாஜி, ஸ்ரீதர், தேவமணி உட்பட 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

    நிர்வாகிகளை அறிமுகம் செய்து சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.

    ×