search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்ட அமைச்சகம்"

    • அரசுக்கும், கவர்னர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
    • முதலீடுகளை ஈர்க்க சென்ற முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தையும் அவர் விமர்சித்து இருந்தார்.

    சென்னை:

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி பொறுப்பேற்றார். அப்போது அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "ராஜ் பவனிலோ அல்லது ஆளுநரிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை" என்று கூறினார். பல்கலைக்கழகங்கள் தொடர்பான 8 மசோதாக்களுக்கும், சென்னைக்கு அருகில் ஒரு சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவுக்கும் ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளேன்" என்று அவர் கூறியிருந்தார்.

    அதே நாளில், அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகக் கூறினார்.

    இந்நிலையில் அரசுக்கும், கவர்னர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் தி.மு.க. அரசின் திராவிடம் மாடல் கொள்கையை கவர்னர் ரவி கடுமையாக சாடி இருந்தார். அத்துடன் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தையும் அவர் விமர்சித்து இருந்தார்.

    இந்நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 13 மசோதாக்கள் கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்ட மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மதம் அனுப்பிய 2 மசோதாக்கள் சேர்த்து 13 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பது தகவல் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

    சட்டத்துறையின் பதிலின்படி, ஆளுநரிடம் "நிலுவையில் உள்ள" மற்ற மசோதாக்கள் தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டங்கள் (திருத்த மசோதா), சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, (கவர்னரால் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கப்படும்), டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் (இரண்டாம் திருத்தம்) ஆகியவற்றை நிர்வகிக்கும் சட்டங்களில் திருத்தம் தொடர்பான மசோதாக்கள்; மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, மற்றும் தனுவாஸ் (திருத்தம்) மசோதா, போன்றவை ஆகும்.

    இந்த மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதாகும். மேலும் 10 மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிதிச் செயலாளரை சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பது தொடர்பான ஒரு மசோதாவும் அடங்கும்.

    நில ஒருங்கிணைப்பு மசோதாவைத் தவிர, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களும் அடங்கும் என தமிழக சட்டத்துறை தெரிவித்துள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிலின்படி, கவர்னர் ரவி கடந்த ஆண்டு 48 மசோதாக்களுக்கும், இந்த ஆண்டு 21 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2022 சட்டமன்றத்தால் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் அதை முன்பே திருப்பி அனுப்பினார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×