search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேடு விளைவிக்கும் திட்டங்கள்"

    மத்திய அரசு பல கேடு விளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை பாலை வனமாக்க முயற்சி செய்து வருகிறது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #vaiko #centralgovernment #cauveryissue

    பீளமேடு:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    அண்ணா மறைவுக்கு பிறகு தி.மு.க.வை கண்ணை இமை காப்பது போல் காத்து வரும் கலைஞருக்கு இன்று 95-வது பிறந்த நாள். அவரை மனமார வாழ்த்துகிறேன். அவரது கணீர் குரல் மீண்டும் ஒலிக்க இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன்.


    காவிரி மேலாண்மை வாரியத்தை அரசிதழில் வெளியிட்டது வெற்றி என முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கூறி வருகிறார்கள்.

    இதில் நாம் ஏமாற்றப்பட்டு உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நீதியை குழி தோண்டி புதைத்து விட்டு தமிழகத்துக்கு ஓர வஞ்சனை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

    நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முற்றிலும் மாற்றி உள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனில் எதிர் காலத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.

    இல்லை என்றால் மேகதாது உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது.

    விவசாயிகளின் விளை நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கி எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கேடு விளைவிக்கும் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது.

    பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும். தமிழகம் வளம் பெறட்டும். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை.

    மத்திய அரசு பல கேடு விளைவிக்கும் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை பாலை வனமாக்க முயற்சி செய்து வருகிறது.

    திருட்டு போன ராஜராஜ சோழன் சிலையை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்க வேலை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #vaiko #centralgovernment #cauveryissue

    ×