search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைக்க நடவடிக்கை"

    கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GasCylinder #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை திடீர் திடீரென்று உயர்த்தப்பட்டு மக்கள் மீது பொருளாதார சுமை ஏறுவதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நேற்றைய தினம் இந்திய ஆயில் நிறுவனம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது மானியமில்லாத கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மானிய விலை கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.2.89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம், மானியம் இல்லா சிலிண்டர் என எதுவாக இருந்தாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை, மக்கள் படும் கஷ்டம், சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    எனவே, மத்திய அரசு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலாவது உடனடியாக எரிபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறுஅவர்கூறியுள்ளார். 
    ×