search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் கேட்டு பொதுமக்கள்"

    • சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் அருகே முடுக்கன்துறையில் கடந்த ஒரு வார காலமாக சரியாக குடிநீர் வருவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் புளியம்ப ட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் தொப்பம் பாளையம் துணை மண்டல அலுவலர் சக்திவேல் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக சாலை மறியல் செய்து வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அதில் உடனடியாக உடைந்த குடிநீர் குழாய் சரி செய்து குடிநீர் சீராக வருவ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    அதன் பேரில் சாலை மறியல் செய்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் இந்த குடிநீர் பிரச்சினை இங்கு மட்டுமல்ல புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மற்றும் கிராமப்புற ங்களிலும் இந்த குடிநீர் பிரச்சினை மிகவும் அதிகரி த்துள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கல்லாங்காடுபாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.
    • இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியான கல்லாங்காடு பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.

    இது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் கேட்டபோது கடந்த 20 நாட்களுக்கு மேலாக எங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. அப்படியே தண்ணீர் வந்தால் மிகவும் குறைந்த அளவே வருகிறது.

    பலமுறை அதிகாரி களிடம் முறை யிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.

    சாலை மறியல் பற்றி தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா தமிழ்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அதில் இன்று மதியத்திற்குள் குடிநீர் வினியோகம் சரி செய்து வழங்கப்படும் என உறுதி கூறியதன் பெயரில் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×