search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திக்கத்து"

    திருவாரூரில் இடைத்தேர்தலையொட்டி சின்னம் வரையும் தகராறில் அ.தி.மு.க. பிரமுகரை தினகரன் அணியை சேர்ந்த அவரது அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பரபரப்பால் பல்வேறு கட்சியினரும் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக சுவர்களில் கட்சி சின்னம் வரைவதில் கட்சியினர் இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் சின்னம் வரையும் தகராறில் அ.தி.மு.க. பிரமுகரை தினகரன் அணியை சேர்ந்த அவரது அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திருவாரூர் அடுத்த சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 40). இவர் அ.தி.மு.க. கிளை பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவரது அண்ணன் ஜெய்சங்கர் (43). இவர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் ஆவார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்காக சுவர்களில் சின்னம் வரைவது தொடர்பாக ரமேஷ் குமாருக்கும், ஜெய்சங்கருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று ரமேஷ்குமார் வீட்டுக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த மோகன்குமார் என்பவர் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெய்சங்கர், மோகன் குமாரிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்குமார், ஜெய்சங்கரை கண்டித்து பேசினார்.

    இதையடுத்து ஜெய்சங்கர், தான் வைத்திருந்த கத்தியால் தம்பி ரமேஷ்குமாரை குத்தினார். அப்போது அங்கு வந்த ஜெய்சங்கரின் மனைவி திலகா, மற்றும் திருவாரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ராமன் ஆகியோரும் ரமேஷ்குமார், மற்றும் மோகன்குமாரை தாக்கினர்.

    கத்திக்குத்து மற்றும் தாக்குதலில் ரமேஷ்குமார், மோகன் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் ஜெய்சங்கர் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    காயம் அடைந்த ரமேஷ் குமார் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜெய்சங்கரும், தனது தம்பி ரமேஷ்குமார் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறி திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ரமேஷ் குமார், ஜெய்சங்கர் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்கினர்.
    தந்தையுடனான கள்ளக்காதலை நிறுத்துமாறு கண்டித்தும் கண்டுக்கொள்ளதால் நடுரோட்டில் விரட்டி சென்று பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி (45). இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று மதியம் திருப்பூர் பஸ் நிலையம் குமரன் சிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரங்கநாயகியை குத்த முயன்றார்.

    இதனால் பயந்து போன ரங்கநாயகி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விடாமல் துரத்தி சென்ற வாலிபர் கத்தியால் மீண்டும் குத்த முயன்றார். அதனை தடுக்க ரங்கநாயகி முயன்றார்.

    ஆனாலும் வாலிபர் ரங்கநாயகி கையில் குத்திவிட்டார். வலியால் அவர் அலறி துடித்தார். இதனை பார்த்ததும் அங்கு பஸ்சுக்காக காத்து இருந்த பயணிகளும், பொதுமக்களும் ஓடி வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் இருந்த கத்தியை பறித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த ரங்கநாயகியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி பின்புறம் உள்ள ஸ்ரீவித்யா நகரை பகுதியை சேர்ந்த அருண் (30) என்பது தெரிய வந்தது.

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அருணை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது-

    எனது தந்தை துரை கடந்த சில மாதங்களுக்கு முன் எனது தாய் ரத்தினத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் எனது தந்தைக்கும், ரங்கநாயகிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதனை நான் கண்டித்தேன். ஆனாலும் எனது தந்தை ரங்கநாயகியுடன் உள்ள கள்ளத்தொடர்பை நிறுத்தவில்லை. இது தொடர்பாக ரங்கநாயகியையும் கண்டித்தேன். அவரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். அவரை பழி வாங்க திட்டமிட்டேன். இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் ரங்கநாயகி நிற்கும் தகவல் கிடைத்ததும் அங்கு வந்தேன். அவரை கத்தியால் குத்தினேன். அவர் பயத்தில் எனது கையை பிடித்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பஸ் நிறுத்தத்தில் அருண், ரங்கநாயகியை கத்தியால் குத்தும் காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை வாட்ஸ் அப்பில் பரப்பி வருகிறார்கள். மேலும் இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவிலும் பதிவாகி உள்ளது. இந்த காட்சியையும் பரப்பி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    ×