search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.டி.எம். மையம்"

    • வாடிக்கையாளர்கள் அவதி
    • ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகில் பள்ளிகூடம், பெட்ரோல் பங்க், தனியார் ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வரு கின்றன. இதனால் எப்போதும் வாடிக்கை யாளர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சம்மந்தப்பட்ட வங்கிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்.களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட வங்கி உடனே நடவடிக்கை எடுத்து செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம்.யை செயல்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏ.டி.எம். மையத்தின் கதவானது பழுதடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.
    • கதவை தொட்டால் உடனடியாக மேலே விழும் நிலையில் காட்சியளிக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலை ஓரத்தில் 5-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகின்றன. அதில் வென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் ஆர்ச்சிக்கு எதிரே இயங்கி வரும் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடி கதவானது பழு தடைந்து கதவின் மேற்புறத்தில் பிடிமானம் இல்லாமல் சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதனால் அந்த வங்கியின் வாடிக்கை யாளர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். மையத்தின் கதவை கண்டு அச்ச மடைந்துள்ள னர். உள்ளே யாரேனும் சென்றால் கதவை தொடாமல் செல்ல முடியாது. கதவை தொட்டால் உடனடி யாக மேலே விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.

    இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் அதிகாரிகள் பாவூர்சத்திரத்தில் வாடிக்கை யாளர்களை அச்சுறுத்தும் வண்ணம் காட்சியளிக்கும் கண்ணாடி கதவினை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கை யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சியை கைப்பற்றி விசாரணை
    • வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே புத்தேரியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம்.ஐ உடைக்க முயன்றனர்.ஆனால் ஏ.டி.எம். மையத்தை உடைக்க முடியவில்லை. இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது.

    இன்று காலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றபோது ஏ.டி.எம். உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஏ.டி.எம். உடைக்கப்பட்ட தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சாரும் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×