என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் ஏ.டி.எம். மையத்தின்  கதவு சரி செய்யப்படுமா? - வாடிக்கையாளர்கள்  கோரிக்கை
    X

    பாவூர்சத்திரத்தில் ஏ.டி.எம். மையத்தின் கதவு சரி செய்யப்படுமா? - வாடிக்கையாளர்கள் கோரிக்கை

    • ஏ.டி.எம். மையத்தின் கதவானது பழுதடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.
    • கதவை தொட்டால் உடனடியாக மேலே விழும் நிலையில் காட்சியளிக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலை ஓரத்தில் 5-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகின்றன. அதில் வென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் ஆர்ச்சிக்கு எதிரே இயங்கி வரும் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடி கதவானது பழு தடைந்து கதவின் மேற்புறத்தில் பிடிமானம் இல்லாமல் சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதனால் அந்த வங்கியின் வாடிக்கை யாளர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். மையத்தின் கதவை கண்டு அச்ச மடைந்துள்ள னர். உள்ளே யாரேனும் சென்றால் கதவை தொடாமல் செல்ல முடியாது. கதவை தொட்டால் உடனடி யாக மேலே விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.

    இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் அதிகாரிகள் பாவூர்சத்திரத்தில் வாடிக்கை யாளர்களை அச்சுறுத்தும் வண்ணம் காட்சியளிக்கும் கண்ணாடி கதவினை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கை யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×