search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிதலைவர்"

    பிரதமர் பதவிக்கு மோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சிதலைவர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார். #AmitShah #RahulGandhi
    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியுற்றதன் பிறகு அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று முதல் முறையாக ராஜஸ்தான் வந்தார்.

    ஜெய்ப்பூரில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். பா.ஜனதா தனது பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தி உள்ளது.

    ஆனால் எதிர்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளனர். ஆனால் பிரதமர் வேட்பாளருக்கு ஒருவரை அவர்களால் முன்நிறுத்த முடியவில்லை.



    நான் ராகுல்காந்தியிடம் கேட்கிறேன் எங்கள் அணியில் நரேந்திரமோடி இருக்கிறார். உங்கள் அணியில் யார் தலைவர்? என்பதை சொல்லுங்கள். எதிர்க்கட்சி அணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவர் தோன்றி கொண்டு இருக்கிறார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் நாம் தோற்று விட்டோம் என்பதால் யாரும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நமக்கும், அவர்களுக்கும் இடையே 1 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டுகள் தான் வித்தியாசம் உள்ளது. நாம் கடுமையாக உழைத்தால் மீண்டும் எழுச்சி பெற்று வெற்றி பெறமுடியும்.

    நமக்கு அதிகாரம் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு சேவை செய்வது தான் முக்கியம் 1950-ம் ஆண்டு நமது கட்சி தொடங்கப்பட்டது. இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சியை பிடிப்போம். நமது கட்சி நாடுமுழுவதும் விரிவடைந்து வலுவாக உள்ளது.

    இவ்வாறு அமித்ஷா பேசினார். #AmitShah #RahulGandhi
    ×