search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டியில் பலத்த மழை"

    ஊட்டியில் பலத்த மழை பெய்தது. கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
    காந்தல்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று இரவு 2-வது நாளாக மழை பெய்தது.

    ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது. இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.

    ஊட்டியில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இன்றும் சாரல் நீடித்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நேற்று மாலை வரை சாரல் மழை நீடித்தது. இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    ஊட்டியில் பெய்த பலத்த மழையில் மின்னல் தாக்கி அரிய வகை மரம் தீப்பிடித்து எரிந்தது
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர், கோத்தகிரி, கொட நாடு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பிரதான பகுதியான பசும் புல்வெளிக்கு அருகில் பிரமாண்ட மரமான குரங்கு ஏறாத மரம் என அழைக்கப்படும் அரக்கேரியா பிட்வில்லி என்ற அரிய மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது.

    இதனால் அந்த மரத்தின் அடிப்பகுதி வரை தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் மரம் சேதம் அடைந்தது. 150 ஆண்டுகள் பழமையான இந்த மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

    சலங்கை ஒலி உள்ளிட்ட பல திரைப்பட காட்சிகளில் இந்த மரம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    தொடர் மழை - பலத்த காற்று காரணமாக ஊட்டி -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்ல நள்ளி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் இந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த மரம் ஒரு லாரியின் மீது விழுந்ததில் லாரி சேதம் அடைந்தது. இதே போல் குன்னூர் - கோத்தகிரி சாலையில் மூன்ரோடு பகுதியில் மரம் விழுந்தது. இதனை தீயணைப்பு படையினர் அகற்றினார்கள். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

    கோவை, மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. கோவை நகரில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 88 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஊட்டியில் பலத்த மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் கனமழை வெளுத்து வாங்கியது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. அடர்ந்த மேக மூட்டமும் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றன. பள்ளி, கல்லூரி மாற்றும் வேலைக்கு செல்வோர் கம்பளி ஆடை அணிந்து சென்றனர். பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நொண்டிமேடு, குன்னூர், பர்லியார் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குன்னூர் பகுதி நிலச்சரிவு ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரம் அதிகமாக உள்ளதால் இந்த பகுதி மக்கள் நிலச்சரிவு அபாயத்தில் தூக்கத்தை தொலைத்து விடியவிடிய அச்சத்தில் இரவை கழித்தனர். இதில் பலியார் பகுதி ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியாகும். குன்னூர் சாலைகள் மழைவெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களின் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து 3 நாட்கள் கனமழை நீடிக்கும் என்பதால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் முக்கியப்பங்கு வகிக்கிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கதளி, நேந்திரன், பூவன், செவ்வாழை மற்றும் பிற வாழை ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே யுள்ள வெள்ளிப்பாளையம், வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், பாலப்பட்டி, வேடர்காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் உள்ள வாழைகள் பாதியில் முறிந்து நாசம் அடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் சேற்றில் விழுந்து நாசம் அடைந்தன.

    இந்த சூறாவளிக்காற்றில் 50 ஆயிரம் வாழைகள் நாசம் அடைந்திருக்கும் என்று தெரிகிறது.

    ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.

    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இரண்டரை மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக ஊட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். 

    ஊட்டி மட்டுமின்றி அதனை சுற்று வட்டார பகுதிகளான காந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    ×