search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மகளிர் தின விழா"

    • பெண்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும்.
    • அன்பு உள்ளத்தில் அன்னை தெரசா போல, வீரத்தில் வேலு நாச்சியார் போல விளையாட்டில் பி.வி சிந்து போல வெற்றிகளை குவிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவி மீனா வரவேற்றார். கல்லூரி முதல்வர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, பெண்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும். அதன் மூலம் குடும்பமும், நாடும் சிறக்கும். அன்பு உள்ளத்தில் அன்னை தெரசா போல, வீரத்தில் வேலு நாச்சியார் போல விளையாட்டில் பி.வி சிந்து போல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி கூடுதல் வழக்கறிஞர் சவுந்தரி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது பெண்கள் எதையும் தாங்கும் மனவலிமை பெற வேண்டும் என்று பேசினார்.

    ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பரிமளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், மாணவிகள் குறிக்கோளை அடைய கடுமையாக உழைத்திட வேண்டும் என்றார். பெண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் மீனாட்சி தொலை நோக்கு பார்வையில் சிந்தித்து மாணவிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

    இதில் கவிதை, கட்டுரை, பேச்சு ,ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவி கிருத்திகா, கணினி அறிவியல் துறைத்தலைவி ராஜலட்சுமி ஆகியோர் விழா ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

    இதில் அனைத்து துறை பேராசிரியைகளும் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியை கரோலின் ரோஸ் நன்றி கூறினார்.

    • தொண்டி அருகே உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • இதில் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவெற்றியூர் சமுதாயக்கூடத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலகு, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட சமூக நலத்துறை, மருத்துவத்துறை, சைல்டு லைன் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவனம் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. ஸ்பீடு அரசு சாரா தொண்டு நிறுவன இயக்குநர் தேவராஜ் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் சந்திர எபிநேசர் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாசுகி, முதன்மை மருத்துவ அலுவலர் எட்வின், சமூக நல விரிவாக்க அலுவலர் மெர்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித நார்பட் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவன ஊழியர்களின் கவிதை பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் தொண்டு நிறுவன தன்னார்வலர் பொன்னுத்தாயி நன்றி கூறினார். இதில் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 4-வது ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 சாதனை பெண்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் ஆண்டுதோறும் உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவித்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார். அதன்படி 4-வது ஆண்டு விருது வழங்கும் விழா மகா திறன் மங்கை என்ற தலைப்பில் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    அறக்கட்டளை நிறுவனத்தலைவர் இந்திரா சுந்தரம் தலைமை தாங்கினார். மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் வனிதா, அவினாசி கோட்டக்கலால் அலுவலர் ராகவி, பல்லடம் அரசு கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகவும், கிட்ஸ் கிளப் கல்வி நிறுவனங்களின் தலைவர் மோகன் கார்த்திக், நடிகர் அருண்குமார் ராஜன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 சாதனை பெண்கள் மற்றும் யாருடைய உதவியும் இன்றி தானாகவே படித்து, முயற்சி செய்து தற்போது கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் திருநங்கை சமீரா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இதில் மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் முத்துசாமி, அருண்குமார், மனோரஞ்சிதம், மாணிக்கவாசகம், திவ்யா, அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகிகள் கண்ணாம்பாள், சதீஷ்குமார், சுரேஷ், மலர், புவனேஷ்வரி உள்பட அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனர் சுந்தரம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்–டது.

    ×