search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளையோர் ஒலிம்பிக் போட்டி"

    இளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன. #YouthOlympicSilver #India #WomenHockey
    பியூனஸ் அயர்ஸ்:

    206 நாடுகள் கலந்து கொண்டுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதன் ஆக்கி (5 பேர்) போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆனால் அந்த முன்னிலையை இந்திய அணியால் நீண்ட நேரம் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. ஆட்டம் போகப்போக இந்திய அணியினரின் தடுப்பு ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வை பயன்படுத்தி மலேசிய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது.



    முடிவில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இந்திய அணி சார்பில் கேப்டன் விவேக் சாகர் பிரசாத் 3-வது மற்றும் 6-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மலேசிய அணி தரப்பில் பிராதுஸ் ரோஸ்டி 5-வது நிமிடத்திலும், அகிமுல்லா அனார் 14-வது மற்றும் 19-வது நிமிடத்திலும், ஆரிப் இஷாக் 17-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

    பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் சந்தித்தன. இந்திய அணி முதல் நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த கோலை மும்தாஜ் கான் அடித்தார். அதன் பின்னர் அர்ஜென்டினா அணியினரின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியினர் திணறினார்கள். அத்துடன் அந்த அணியின் தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்தால் அதனை தகர்த்து இந்திய அணியினரால் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

    உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் அசுர தாக்குதலை தொடுத்த அர்ஜென்டினா அணி அடுத்தடுத்து 3 கோல்களை திணித்தது. அந்த அணியின் ஜியானெல்லா பாலெட் 7-வது நிமிடத்திலும், சோபியா ராமல்லோ 9-வது நிமிடத்திலும், பிரிசா புருக்ஜெஸ்செர் 12-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

    இந்திய அணி இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி என்று மொத்தம் 10 பதக்கங்கள் வென்று 10-வது இடத்தில் உள்ளது. ரஷியா 24 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என்று 43 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. #YouthOlympicSilver #India #WomenHockey
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை சிம்ரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். #YouthOlympics #IndianWrestlerSimran
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 43 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. தகுதிச்சுற்றுகளில் எளிதில் முன்னேறி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை சிம்ரன், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் எமிலி ஷில்சனிடம் தோல்வியடைந்தார்.



    துவக்கத்தில் சற்று முன்னிலை வகித்த சிம்ரன், அதன்பின்னர் 6-11 என்ற நிலையில் பின்தங்கி தோல்வியை சந்தித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியா மொத்தம் 3 தங்கம், 5 வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளது. #YouthOlympics #IndianWrestlerSimran
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.#YouthOlympics2018 #JeremyLalrinnunga
    பியூனஸ் அயர்ஸ்:

    மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    நேற்று இரவு 62 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் விரர் ஜெர்மி லால்ரினுங்கா (வயது 15) மொத்தம் 274 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.



    இப்போட்டியில் துருக்கி வீரர் டாப்தாஸ் கானர் (263 கிலோ) வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் வில்லார் எஸ்டிவன் ஜோஸ் (260 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெர்மி லால்ரினுங்கா, இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளையோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இரண்டு தேசிய சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. #YouthOlympics2018 #JeremyLalrinnunga
    அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். #TababiDeviThangjam
    பியூனஸ் அயர்ஸ்:

    3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளி கணக்கில் வெனிசுலா வீராங்கனை மரியா கிமின்சிடம் தோல்வி கண்டார். இதனால் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

    வெள்ளிப்பதக்கம் வென்ற தங்ஜம் தபாபி தேவி மணிப்பூரை சேர்ந்தவர். ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பந்தயத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ரஷிய வீரர் கிரிகோரி ஷமாகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், செர்பியா வீரர் அலெக்சா மிட்ரோவிச் 227.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.  #TababiDeviThangjam
    ×